படைப்பாளர் வெ. தமிழழகன் அவர்கள் இந்நூலில் பன்னிரண்டு நகைச்சுவைக் கதைகளைத் தந்துள்ளார். ஒவ்வொரு கதையும் குதூகலச் சிரிப்பூட்டுகிறது. மனச்சாட்சி இல்லாத மகிழ்ச்சிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் இந்த உலகில் படிப்பவரைச் சிரிக்கச் செய்யவேண்டும் என்று நினைத்து எழுதுவதே மனித தர்ம்மம்தான். பிறரைச் சிரிக்க வைக்கவேண்டும். குடும்பத்தினரைச் சிரிக்கவைக்கவேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொருவர் உள்ளத்திலும் குடிகொண்டிருந்தால் இந்த உலகம் அழிவுப் பாதையிலிருந்து விலகி அன்பு வழியில் நடைபோடத் தொடங்கிவிடும்.
உரையாடல்களில் நகைச்சுவை மிளிர்கிறது. படித்துச் சிரிப்பதற்கு ஏற்ற நல்ல நூல். யாரும் நம்மை சிரிக்க விடவில்லையே என்று நினைப்பவர்களுக்கு இந்நூல் சிறந்த வடிகால்.