"மனச்சாட்சியின் குரல் பாரதி" என்னும் இந்நூலில் 34 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சக்தி, சாந்தி, தாமரை, தேசாபிமானி, ஆன்ந்த போதினி, சிந்தனை, குமரிமலர், முல்லை, ஆராய்ச்சி போன்ற புகழ்வாழ்ந்த இதழ்களில் வெளியான கட்டுரைகளைத் தமிழறிஞர் இளசை மணியன் அர்கள் அரிதின் முயன்று தொகுத்துத் தந்துள்ளார்கள். 1951 முதல் 1996 வரை வெளிவந்த கட்டுரைகளைச் சிரம்ம் கருதாது தொகுத்துத் தந்திருப்பது கடந்த காலத்தை வாசகர்களின் கைகளில் படைத்துத் தரும் அரிய முயற்சியாகும்.
காலத்தால் மறக்கமுடியாத அரும்பெரும்பணியாகும். இளசைமணியன் அவர்களுக்கு எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.