வியாபாரத் துறையில் சாதனை படைத்தவர்கள் பற்றி ஆன்ந்த விகடன் இதழில் - நாணயம் பகுதியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.
'புரபஷனல்கூரியரை ஆரம்பித்தவர் நெல்லைக் காரர்!' என்பதில் ஆரம்பித்து, கே.பி.என். டிராவல்ஸின் வளர்ச்சியில் அதன் அதிபர் காட்டிய அதீத அக்கறை.. இப்படியெல்லாம் இப்படி ஒவ்வொரு வாரமும் வெளியான இந்தக் கட்டுரைகளை ஆர்வத்தோடு ஆரபித்து மகிழ்ந்தார்கள் விகடன் வாசகர்கள்.
தங்கள் டைரி பக்கத்தை பிரித்துக் காட்டிய தொழிலதிபர்கள் அனைவருமே பற்றிக்கொள்ள கை ஏதுமின்றி, தங்கள் சொந்த உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் உயர்ந்தவர்கள்தான். முதலீடு என்று பெரிதாக எதையும் கைவசம் வைத்திருக்காதவர்கள். வேதனை, அவமானம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, இவலக்கொன்றே குறிக்கோளாக புதிய பாதையைப் பிடித்தவர்கள். இவர்களின் வாழ்க்கைக் கதையைப் படிக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும்!' என்ற வியாபாரத் தீ சுடர் விடும். அதுதான் இந்தத் தொகுப்பின் வெற்றி!
படியுங்கள். உங்களுக்குள்ளும் இந்த சுடர் தீ பிடிக்கும்!
- பதிப்பாளர்