பதிப்புரை: மனத்தில் பட்டதை மற்றவர்க்குப் பயப்படாமல் 'பளார் பளார்' என்று மின்னொளி பாய்ச்சி, படிப்பவரின் இதய இடுக்குகளில் எல்லாம் அறிவுக்கதிரைப் பரப்பினார் பாரதிதாசன். அவரது எழுத்துக்கள் இடிமுழக்கங்கள்போல் வாசகர் உள்ளங்களில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின. பாரதிதாசனின், நூல் வடிவம்பெறாத பல படைப்புகளை நூல் வடிவமாகத் தொகுத்துத் தந்த டாக்டர் ச.சு. இளங்கோ அவர்கள் இந்நூலையும் தமிழ்ப்பெட்டகத்தில் சேர்க்கிறார்.
பாரதிதாசன் நடத்திய 'குயில்' இதழில் வெளிவந்த பல கருத்துச் செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. தனிப்பாடல்களுக்குப் பாரதிதாசன் விடுத்துள்ள பண்பட்ட வேண்டுகோள், மனத்துள் வைக்க பாரதிதாசன் சுட்டிக் காட்டியவை, இலக்கிய அறிவை வளர்க்கும் பாரதிதாசனின் திட்டங்கள் மற்றும் பல அறிவை வடிவங்களைத் தாங்கி 'இலக்கியக் கோலங்கள்' எழில் ஊட்டுகின்றது.