இந்நூலில் இரத்தினக் கற்களின் தோற்றம், வரலாறு, கிடைக்கும் இடங்கள், இரத்தினக் கற்களின் வகைகள், தன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. விலை மதிக்க முடியாத இரத்தினக் கறகள் மேல்நாட்டு மக்களுக்குக் கூட எட்டாத கனியாக உள்ளது. இந்நிலையில், சாதாரண மக்களுக்கும் புரிந்துகொள்ளும் வகையில் இரத்தினக் கற்களைப் பற்றிய பல்வேறு உண்மைகளை நூலாசிரியர் விளக்கி இருக்கிறார். கிடைப்பதற்கான வழி வகைகளையும் தெரிவிக்கிறார்.