காட்டில் இருக்கிறது ஒரு கால்நடை மருத்துவமனை. அங்கே பணியாற்ற புதிய கால்நடை மருத்துவர் வருகிறார். தங்களது உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை வேண்டி நிறைய விலங்குகள் அவரிடம் வருகின்றன. நோயாளி விலங்குகளிடம் அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் தான் கதை. திரு. பிரபாகரன் பழச்சி அவர்கள் மலையாளத்தில் இந்த நாவலை எழுதியிருக்கிறார்கள். மலையாளத்தில் மலையாளச் சிறார்களின் அபிமானத்தைப் பெற்ற இதை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் யூரா. வாசுகி அவர்கள் தமிழ் சிறார்களுக்காக.