ஆதி காலத்தில் மனிதர்கள் குளிர் காய்ந்த பிறகு கிடந்த சம்பல் குவியலிலிருந்து கண்டெடுத்ததுதான் இரும்பு. அப்புறம் மனித வரலாற்றில் இரும்புக் காலம் என்ற யுகமே ஆரம்பமாயிற்று. இன்றுவரை தொடர்கிறது. இரும்பு எங்கிருந்து கிடைக்கிறது? எவ்வாறு பிரித்தெடுக்கின்றோம்? என்று உங்களுக்கு எழும் கேள்விகளுக்கு எல்லாம் இரும்பின் கதை மூலம் தாத்தா பதில் சொல்கின்றார். ஏற்கனவே தாத்தா சொல்லிய காகித்ததின் கதையையும்,ரப்பரின் கதையையும் படித்துவிட்டீகள் அல்லவா .