நிறவனத் திருச்சபையையும் கட்டமைக்கப்பட்ட உலகத்தையும் தாண்டிய 'மனிதம்' என்கின்ற பொருண்மைதான் எனக்கு முக்கியம். இந்த கண்ணுக்குப் புலப்படாத மனிதத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் அனைத்து சக்திகளுடனும் இணைந்து செயல்பட நான் விழைந்துகொண்டிருக்கிறேன். நான் எந்த இடத்திலும் எந்த தருணத்திலும் அந்த சக்திகளை அடையாளம் காணும் தேடலில் இருக்கிறேன். நான் எப்பொழுதும் திருச்சபையின் விளிம்பில், இயேசுவின் இறையரசும் உலகமும் சிந்திக்கும் இடத்தில் என்னை இருத்திக்கொள்ள முயல்கிறேன்.