இந்தப் பத்துக் கதைகளின் மூலம் கட்டமைக்கக் கூடியது சுயச்சாதாபமற்ற, 'பெருமித' வாழ்க்கையை நம்பும், சுய அடையாளத்தைத் தேடும், இயலாமையிலும் உதட்டைக் கடித்து அழுகையை விழுங்கித் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் பெண்ணின் உலகமாக இருக்கிறது. இந்தப் பெண், சமூக அமைப்பின் மீது அளவற்ற பரிகாசம் மற்றும் நிராகரிப்பு, புதிய தேர்ந்தெடுப்புகளைப் பற்றிய மகிழ்ச்சி, வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனோதிடம் ஆகியவற்றையும் கொண்டிருக்கிறாள்.