தாய்ப்பாலூட்டலைப் பின்பற்ற வேண்டிய காரணங்களையும் குழந்தைக்குச் சரியான விகிதத்தில் பாலூட்டல் மூலம் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் தெளிவுபடுத்துவதுடன், 'பொது இடங்களில் பாலூட்டல்', 'உடை அலமாரியைத் தயாரித்தல்', 'உங்கள் புதிய பணிகளைத் திட்டமிடல்' போன்ற தலைப்புகளில் பல பயனுள்ள விளக்கங்களையும் இந்நூல் வழங்குகிறது. தாய்மார்கள் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இது.