எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்' நமது உடலின் அதிமுக்கிய பாகம் தலை. அதற்கு அடுத்தப்படியாக உள்ளது வயிறு. இவ்விரண்டு பாகங்களிலும் தான் அடிக்கடி பிணிகள் ஏற்படுகின்றன. நம் உடலின் தேவைகளை அறியவும், உடல் உறுப்புகளை உடனடியாக இயக்கச் செய்யவும் ஆக்கரீதியான வேலைகளைச் செய்துகொண்டிருக்கும் ஆற்றல் மிக்க மூளை தலை பாகத்தில்தான் இருக்கிறது. செயலைப் பொறுத்தோ, செய்கையைப் பொறுத்தோ அதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடும்பொழுது தலையான செயல் என்றே அழைக்கின்றோம்.தலைவன்,தலைவி இல்லாத காவியமோ, ஓவியமோ இல்லை. தலைவன் இல்லாத படை நிலை குலைந்துவிடும்.