திருப்பதிவரை பாதயாத்திரை போய்வரலாமா ? நான் பணியாற்றும் T VS சுந்தரம் பாசனர்ஸின் பர்சனல் மானேஜர் திரு. ரமேஷ் என்னிடம் கேட்ட போது, ஒரு வினாடி மலைப்பாகத்தான் இருந்தது எனக்கு. பாதயாத்திரையா ,ஆமாம் ஸ்சுவாமி மெட்ராஸ்ல இருந்து கிளம்பி நாலுநாள் நடை வரீரா. ஏன் பஸ்ல போனா ஆகாதா இல்ல இதுதான் என்ன போக்குவரத்து வசதியில்லாத கற்காலமா? தான் இப்படி திருப்பி கேட்பேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.