இந்நூலில் 12 அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன. முதலில் உரை வடிவில் வழங்கப்பெற்ற இக்கட்டுரைகள், தமிழ் கூறும் நல்லுலகிற்கும் பயனளிக்கும் வகையில் நூல் வடிவில் செப்பம் பெற்று வெளிவருதல் வரவேற்பதற்குரிய தொன்றாகும். இந்நூலாசிரியர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சட்டத் தமிழறிஞர் வீ. சந்திரன் அவர்கள், தமிழ் நாட்டரசின் சட்ட மொழி பெயர்ப்பாளராக ஏறத்தாழக் கால் நூற்றாண்டு தமிழ்க் குழுவின் இயக்குநராகப் பணிபுரிந்து வரும் இவர், ஏற்கெனவே ஐந்து தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.