மலையேற வரும் குழுவினருக்கு உதவியாகச் சுமை தூக்கும் கூலிக்காரானாகச் சென்றவன்தான் அவன். அதன் மூலம் மலையேறும் பயிற்சியும் மன உறுதியும் கொண்டு, அந்த எவரெஸ்ட்டை நோக்கி ஏறி, அதன் உச்சியில் ஏறி கம்பீரமாக நின்று இத்த உலகை வெற்றிக் களிப்புடன் கண்டு ரசித்தவன்
அவனது போராட்ட வாழ்வு - வாழ்வில் லட்சியப் பயணம் செய்ய விரும்புவோர்க்கெல்லாம் உந்து சக்தியாக விளங்கக் கூடியது. டென்சிங்கே தன் வாழ்க்கைச் சரிதத்தைச் சொல்கிறான்; கேளுங்கள்!