"வாழ்க்கை என்னும் கடலில் மனித மனம் பயணிக்கும் விதத்தைப் பதிவு செய்யும் சிறுகதைத் தொகுப்பு. உறவுகள், மனிதநேயம், உணர்வுகள் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்கள் கதைகளின் மையமாக அமைகின்றன.
மனிதர்களின் வெளிப்படையான முகத்துக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகளை ஆராய்கிறது. சில கதைகள் சமூகத்தின் மீது கேள்விகளை எழுப்புகின்றன. சில கதைகள் மனதை நெகிழச் செய்து மனிதநேயத்தை நினைவூட்டுகின்றன. வாழ்க்கைக் கடலில் மனித மனத்தைத் தாங்கிச் செல்லும் ‘மனத்தோணி’."