"இயற்கையை ஒரு உயிருள்ள தோழியாகக் கருதி அதனுடன் உரையாடும் ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு. மரம், மழை, பூ, பறவை, வானம், நிலவு என இயற்கையின் ஒவ்வொரு கூறும் கவிதையில் பேசுகின்றன. இயற்கைக் காட்சிகளுக்குள் மனித வாழ்க்கையின் உண்மைகளையும் கவிஞர் கண்டடைகிறார். குறைந்த சொற்களில் காட்சியையும் உணர்வையும் இணைக்கும் படைப்பு. இயற்கையை ரசிப்பதோடு மட்டுமல்லாமல் அதைப் பாதுகாக்கும் உணர்வையும் ஏற்படுத்துகிறது."