பண்டைக்கால இலக்கியங்களில் இன்றும் - என்றும் மிகவும் பேசக்கூடியதும் நுகரக்கூடியதுமான சரித்திரக் கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்று. கதைகளினுள் சென்று மாயஜாலங்களில் மூழ்கி தன்னையே வசியப்படுத்தி ஒரு நிமிடம் தட்டிப் பார்த்துக்கொள்ளவோ அல்லது கிள்ளிப் பார்த்துக் கொள்ளவோ செய்யும் தந்திரக் காட்சிகள் நிறைந்த கதாபாத்திரங்களின் நடமாட்டம். இக்கதைகளை ஊடகங்களின் மூலம் பார்ப்பதில் கிட்டாத திருப்தி நூலைப் படிப்பதில் நிச்சயம் கிடைக்கும்.