இந்நூல் சங்ககால்ச் சோழநாட்டுப் பேரரசனான கரிகாலன் சிறப்பையும் அவனது கோநகரமான காவிரிப் பூம்பட்டினத்து சிறப்புற்ற வளத்தையும் சோணாட்டவர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் நன்கு விளக்கவல்லது. அவ்விளக்கம்,சாமி. சிதம்பரனார் கையாண்டுள்ள எளிய நடையாலும் விளக்கும் முறையாலும் மேலும் நன்கு புலனாகும் என்பது உறுதி.