இவ்வரிய புராணம் வாழ்வியல் நெறிகளைக் காட்டுவதோடு முக்திக்கு வழிகாட்டியாக விளங்குவதால்தான் காலம் கடந்து வாழ்ந்து இன்றும் வழிகாட்டியாகத் திகழ்கின்றது. கணினி உலகம் கடல் போன்றது என்பது போல இவ்வருள் நூலும் கடல் போன்றது என்பதனை மக்கள் உணர வேண்டும். சுயநலமே உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் இன்றைய சமுதாயத்தில் இளைஞர்கள் மனதில் தொண்டு மனப்பாங்கினை நிச்சயம் உருவாக்க வேண்டும் என்பதே இந்நூலின் முக்கிய நோக்கமும் குறிக்கோளுமாகும். அதுவே இந்நூலின் வெற்றியுமாகும்.