ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகள் என்பன புதுச்சேரியில் பிரெஞ்சு காலனித்துவக் காலத்தில் மொழிபெயர்ப்பாளாராக பணியாற்றிய ஆனந்தரங்கப்பிள்ளை அவர்களின் விரிவான நாட்குறிப்புகள் ஆகும். இவர் 1736 முதல் 1761 வரையிலான கால்நூற்றாண்டுக் கால நிகழ்வுகளை தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். பெரும்பாலான பதிவுகள் தமிழிலேயே உள்ளன.