இந்நூலில் திருவாக்கு வழிபாட்டுப் போற்றி மந்திரம், துன்பந் தீர்க்கும் (பிரதோச) வழிபாட்டுப் போற்றி மந்திரம், சிவராத்திரி வழிபாட்டுப் போற்றி மந்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாம். இவற்றை அன்பர்கள் உண்மைப் பக்தியோடு வழிபாட்டிலே பயன்படுத்தவேண்டும். அன்னை அகிலாண்ட நாயகியின் அருட்புகழ் சாற்றுகின்ற இசைப்பாடல்களையெல்லாம் மேடைகளிலே இசைவாணர்கள் பாடி முழங்க வேண்டும். கும்மி, கோலாட்டம், தாலாட்டு, நோன்புப் பாடல்களைக் கன்னிப் பெண்கள் இல்லங்களிலும் பள்ளி - கல்லூரிகளிலும் பயின்று பாடலாம்.