மெய்ஞ்ஞானத்தை உலகுக்குக் காட்டிய பெரியோர்களுள் ஆதிசங்கரர் தொடங்கி, ஷிர்டி சாய்பாபா வரை 20 மகான்களின் வரலாற்றை இளைய தலைமுறையினர் படித்துப் பயன்பெறும்வண்ணம் பிரபல எழுத்தாளர் திரு. குருமூர்த்தி (மாயூரன்) அவர்கள் சுவைபட எழுதியுள்ளார்கள்.
இளைய தலைமுறையினரை இனிய தலைமுறையினராக மாற்ற வல்ல நல்ல கருத்துகளை நல்கும் மகான்களின் வரலாற்றை மாணவர்கள் படித்தால் நலம் பெறுவர், வளம் பெறுவர்; வாழ்க்கையை ஒளிமயமாக்கிக் கொள்வர். நல்லொழுக்கமும் நற்பண்புகளும் அருகி வரும் இக்காலத்தில், இத்தகைய நூல்கள் மிகுந்த பயன்தரும் என்பதில் ஐயமில்லை.