செந்தமிழ்த்திலகம் திருமதி தேவகி முத்தையா எழுதியுள்ள ''சிந்தனைப்பூச்சரம்'' என்னும் கட்டுரை நூல் பார்வையிடப்பெற்றது. நூலின் முன்பகுதியில் ஆன்மீகம்பற்றிய 15 கட்டுரைகளும், இலக்கியம் பற்றிய 16 கட்டுரைகளும், பயணம் பற்றிய 04 கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன். ஆன்மிகக் கட்டுரை ஒன்றில் சிவலிங்கம்பற்றிய கட்டுரை இடம் பெற்றுள்ளது.