நடப்பு நிகழ்வுகளையும், போக்கிற போக்கில் காணும் காட்சிகளையும் அழகுணர்ச்சியோடும், இயல்பான எதார்த்தத்தோடும் சொல்லத் தெரிந்தவர் பிருந்தா சாரதி என்பதை இத்தொகுப்பில் கண்டு ரசிக்கலாம். காதல் விதைகளைத் தூவிவிடத் தெரிந்துவைத்திருக்கும் அவர், திடீரென்று சித்தராகி ஞானவெளியில் உலாவரவும் தெரிந்தவர். தன்னியல்பில் இருந்து பேசும் கவிதைகளுக்கு எப்போதும் ஆயுள் மிக அதிகம். அவ்வகையில் முக்கோண மனிதன் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளை காலத்தை வென்று நிலைத்திருக்கக் கூடிய தன்மை உடையவை. கவிதைகளின் பன்முகத்தன்மையும், மனித வாழ்க்கையையும், மனித உணர்வுகளையும், இயல்புகளையும் சொல்லிச் செல்லும் பாங்கும், கவிதைகளில் நிறைந்திருக்கும் அழகியல் உணர்வும், சமூக அக்கறையும் இந்த தொகுப்பிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.