தோழர் காமுத்துரையின் சன்னமான கையெழுத்துப் பிரதியைத் தந்து அன்பிற்கினிய ஷங்கரநாராயணன் வாசிக்கச் சொன்னார். முழுக்க வட்டார வழக்குச் சொற்களைக் கொண்டே ஒரு நாவலைப் பின்ன முடியும் என்பதைப் பார்த்து அசந்தேன். அத்துடன் வழக்குச்சொல் நடையிலேயே இன்று நம்மைச் சூழ்ந்துள்ள அரசியல், பொருளியல், குடும்ப உறவு, காதல், தொழிற்சங்கம், அதன் தேவை, முதலாளிகளின் கூட்டணி, சுரண்டல், நையாடல், நகரமயம், வேளாண்மையில் ஏற்படும் இழப்புகள்... என எல்லாவற்றையும் தொட்ட ஒரு முழுமையாக இந்நாவல் விளங்குகிறது.