உயரிய சிறுகதைகளையும் ஒப்பிலா நாவலகளையும் கருத்துச் செறிவுள்ள கட்டுரைகளையும் கவின்மிகு கவிதைகளையும் படித்தவுடன் சிலர், 'நல்ல முறையில் பொழுதைப் போக்கினோம்! என்று மனநிறைவு கொள்வர். வேறு சிலரோ, 'நல்ல கருத்துகள் சிலவற்றை நாம் இன்று கற்க வாய்ப்புக் கடைத்தது!' என்று உளமகிழ்வர். மற்றுஞ் சிலரோ, 'இத்தகைய அரிய படைப்பை இந்த ஆசிரியர் எவ்வாறு உருவாக்கினார்? இதே கருத்து நமக்கும் எழுந்ததே! நம்மால் இதைப் போன்று உருவாக்க இயலவில்லையே! என்னும் வியப்பு உணர்ச்சியையும் மெல்லிய ஏக்க உணர்வினையும் எய்துவர். இந்த மூன்றாவது பிரிவினரின் ஏக்கத்தையும் இதயத் துடிப்பையும் தணிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்நூல்.