#NNV இன்ஸ்டாகிராமில் நீங்கள் கொடுத்த பின்னூட்டங்கள்தான் இந்தத்
தொடர் உரையாடலுக்கான தொடக்கப்புள்ளி. #nnvயோடு அடையாளப்படுத்திக்கொண்டு
இணையவழி இணைந்தவர்கள் பலர். மிகக்குறைந்த காலகட்டத்திற்குள் இதை
டிரெண்டாக்கிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி. இதை ஒரு புத்தகமாகத் தொகுக்கச்
சொல்லி தொடர்ச்சியாக வலியுறுத்தியதும் அவர்கள்தான். வழக்கம்போல் எந்தவொரு
முன்னறிவுப்புமின்றி ஒரு இரவு தொலைபேசியில் அழைத்து இதைப் புத்தகமாக்கலாமா
என்று சொன்னவுடன் அதே வேகத்தில் இதைச் செயல்படுத்திய தம்பி கார்த்திக்கு
வாழ்த்துகள். மேடைகளில் பேசும்போது உங்களிடமே தலைப்பு கேட்டு
பேசியிருக்கிறேன். ஆனால் ‘நல்லதா நாலு விசயம்' என்ற தலைப்பையும்,
வடிவத்தையும் முதன்முதலில் பரிந்துரைத்து இப்படி என்னுடைய நட்புவட்டத்தை
விரிவடையச் செய்த மனைவி துர்காவுக்கு அன்புகள்! கோபிநாத்