"அந்தக்கால மருத்துவர்களை” இந்தக்கால மருத்துவர்கள் அறிந்து கொள்ள நல்லதொரு
வாய்ப்பைத் தருகிறது இந்நூல் என்பது சாலப்பொருத்தம் என்றாலும், வாசிக்கக்
கிடைத்திருக்கும் அற்புதமானவர்களின் வரலாற்று நூல் என்ற வகையில், இது
வாழ்ந்த தலைமுறை, வாழ்விக்கின்ற தலைமுறையாக, வாழும் தலைமுறைக்கும்,
வரப்போகும் தலைமுறைக்குமாகக் கிடைத்திருக்கும் வரலாற்றுப் பெட்டகம் என்பது
இன்னும் பொருத்தமானது! "வரப்புயர...” என வாழ்த்திய ஒளவை பாணியில் நாடறிந்த
இந்நூலாசிரியரின் இப்படைப்பைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், நாலுவரி
சொல்லலாம். மருத்துவமும் படித்தவர், மருத்துவர்களையும் படித்தவர்!
ஆன்மிகமும் படித்தவர், ஆன்றோர்களையும் படித்தவர்! ஆக்கைக்கும்
ஆன்மாவுக்கும் ஒருசேர மருந்து தருபவர்! நல்லதொரு "ஸ்கேனிங் ரிப்போர்ட்”
தந்திருக்கிறார்!