ஈசனின் திருத்தலங்களுக்கு பக்திப் பரவசத்தோடு சென்று வணங்கி, அப்பெருமான் நடத்திய திருவிளையாடல் கதைகளை இந்தப் புத்தகத்தில் சுவைபட விளக்குகிறார் டாக்டர் சுதா சேஷய்யன்.
பக்தி மணம் கமழும் எழுத்து நடை, ஒவ்வொரு திருத்தலங்களையும் முழுவதுமாக நேரில் கண்டு இன்புற்ற மேன்மையான அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. பக்கங்களை ஒவ்வொன்றாகப் புரட்டும்போது, நம்முடைய பாதங்கள் அந்தந்த திருத்தலங்களில் பதிந்து வலம் வருவதை உணர முடிகிறது.
தல வரலாறு, கோயிலின் சிறப்புகள், கட்டடக் கலைநுட்பம், சிற்ப வேலைபாடுகள் குறித்த தகவல்கள் போன்வற்றோடு, தலங்களுக்குச் சென்று வழி படுவதற்கான வழிகாட்டுதலையும் வழங்கியிருப்பது வாசகர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.