தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடையாளமற்றுப் போக வாய்ப்புகள் அதிகம்.இப்படிப்பட்ட எண்ணற்ற பல தகவல்களை உள்ளடக்கி, வளரும் இளம் தலைமுறையினருக்காக வெ.இறையன்பு, சுட்டிவிகடனில் எழுதிய உன்னோடு ஒரு நிமிஷம்; தொடல் கட்டுரைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன