ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று.
பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்பிடித்து, மொத்தமாய் சிறப்புத்தன்மை பெற்றாலும்; ஒரு சில கதைகளை இங்கே சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
' தலைமாணாக்கள்' ஒரு குருவிற்கும், சிஷ்யனுக்கும் உள்ள பற்று என்ன என்பதை சிஷ்யன் தன் கை கட்டை விரலை குருவிற்கு காணிக்கையாய் அளிக்கும் விசித்திரம், உலகிற்கு கூறும் நற்சிந்தனையாகவே படுகிறது.
'மாயைகள்ய ரயில் வண்டியில் செல்லும்போது ஏற்படும் அனுபவங்கள், கண்முன் நேரடிக் காட்சிகளாகவே பதிவாகி விரிகிறது.