உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ள நீதிநூல்களில் விவேக சிந்தாமணியும் ஒன்று. இந்நூல் எழுதியவர் யாரென அறியப்படவில்லை. இந்நூலின் 135 பாடல்களில் கூறப்பட்டுள்ள நீதிகள் நடைமுறை உண்மைகள்; வாழ்வியல் அறங்கள்.
விவேகம் என்பதற்கு பகுத்தறிவு என்றும் பாயிரம் என்றும் பொருள். சிந்தாமணி என்றால் வேண்டுவன எல்லாம் தரும் தெய்வீக மணி எனப் பொருள் பெறும்.
இக்காலத்தில் பல தமிழ் இலக்கிய நூல்கள் வழக்கொழிந்து போய்விட்டன. அதேபோல இந்நூலும் வழக்கொழிந்து போய்விட்டது. எனக்குக் கிடைத்த விவேக சிந்தாமணியின் பழைய பிரதி ஒன்றினை ஆதாரமாகக் கொண்டு எல்லோரும் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் உரை எழுதியுள்ளேன்.
மா.கோமகன்