அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.ஒருவருடைய உள்ளத்தின் தன்மையை, தூய்மையை அவருடைய முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.பொருள் ; அகம் - உள்ளம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ; எதற்குமே ஓர் அளவு உண்டு.அந்த அளவைத் தாண்டினால் தேவர்கள் மட்டுமே உண்ணக்கூடிய அமிர்தமே ஆனாலும் கூட நஞ்சாகி விடும். எனவே ,ஒவ்வொன்றுக்கும் ஒர் அளவை வகுத்துக்கொள்ள வேண்டும். பொருள் ; அமிர்தம் -தேவர்களின் உணவு. இதை உண்ண்டவர்களுக்கு மரணம் இல்லை என்று புராணங்கள் கூறுகின்றன. நஞ்சு -விஷம்.