மெர்வின் எனும் இனிய படைப்பாளி தம் எழுத்துக்களால் சமூகத்தை வழிப்புணர்உ பெறச்செய்பவர். மேன்மை மிக்க தம் எழுத்துக்களால் நீதிமன்ற நடுவராகத் திகழ்கிறார்.நாணயமும் நேர்மையும் இவர் எழுத்துக்களில் கொடிக்கட்டிப் பறக்கிறது. இவர் அதிகார வர்க்கத்தினரையும், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களையும் பார்க்கிறார். எல்லோரையும் பார்த்து,உங்கள் வாழ்வில் வெற்றி பெற உண்மையை, உழைப்பை,நேர்மையைக் கடைப்பிடியுங்கள் என்கிறார்.இவர் ஒரு சாதனை எழுத்தாளர்.வேதனை மிக்க மக்களைப் பார்த்து அவர்தம் இயலாமையைக் கண்டு,வாழ்வில் துவளாதீர்; துடிப்புடன் இருங்கள்'ய என்கிறார். தம் எழுத்துக்கள் வெட்டப்பட்ட வாழைத் தண்டல்ல,நீங்கள் வாழ வேண்டியவர்கள் என்கிறார். மனித உரிமைகளை மதிப்பவர்.மனித நேயம் இவர் எழுத்தில் என்றும் உண்டு. எதைப் படைத்தாலும் உறுதி மிக்க தரைமீது நடப்பவராகவே உள்ளார்.