மனித உரிமைக்கான போராட்டங்களில் ஒரே பக்கத்தைச் சார்ந்து நிற்பவர்களின் ஒன்றுபடும் அல்லது பங்கேற்பு உணர்வைர் சுட்டிக்காட்டும் கருத்தாக்கம், கடமை ஒழுங்கு அல்லது அடையாளம் குறித்த அர்ப்பணிப்பு.
நான்கு இயல்களில் சொல்லப்படும் கூட்டுணர்வு ஒன்றைப் பற்றிய விவரிப்பு நூலின் முதல் இரண்டு இயல்கள் காம்ரேட் எனப்படும் அச்சொல்லின் வரலாற்றைத் தேடிப்பெறுகிறது.
அச்சொல்லை உலக அளவில் உச்சரிக்கப்படும் ஓர் புதிய உணர்வாகப் பரப்புகிறது. அடுத்துவரும் இயல்கள் இன்றைக்கு வெகுவாகத் தேவைப்படும் அதே உணர்வாக மீட்டிச் செதுக்கப்படுகிறது.
நம்பிக்கை சார்ந்த ஓர் அரசியல் உணர்ச்சியாக மறுகட்டமைப்பு செய்கிறது. தனிமனிதம் செழித்துள்ள இந்தக் காலத்தில் இச்சொல் அபூர்வமாகி விட்டது.
அரசியல்வீதியாக உடன் நிற்பவர்களைக் கட்டி அணைக்கிறது. சமயம் பிறப்பித்த பல அபூர்வமான சொற்களைத் தாண்டிய உள்ளடக்கத்தை இழுத்துப் பிடித்து உருவாக்கிய நவீன சொல்.
'தோழரே' எனும் அச்சொல்லின் உச்சரிப்பில் விடுதலைக் கனவுகள் சுடந்து சென்ற தடங்களைக் காண முடியும். தனிமனிதம் கரைந்து போய் கூட்டுணர்வு ஆர்ப்பரித்துப் படையெடுக்கும் உற்சாகத்தை அனுபவிக்க முடியும். கூட்டாளி. பங்காளி உறவின் சொந்தக்காரன், நண்பன், ஊர்க்காரன், சாதிக்காரன் போன்ற எத்தனையோ சொற்களை வென்றுவிட்ட திமிர் இச்சொல்லில் உண்டு.