இருபதாம் நூற்றாண்டின் 72 ஆண்டுகளை எரிக் ஹோப்ஸ்பாம் அவரது நான்காவது நூலின் இறுதிப் பகுதியாக அமைத்துள்ளார். 1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியின் ஆண்டு. 1989 ஆம் ஆண்டு சோவியத்துக்களின் வீழ்ச்சியைக் குறிக்கிறது.
1917 ஆம் ஆண்டைப் பற்றி எழுதும்போது எரிக் ஹோப்ஸ்பாம், "அதைவிட இன்னும் பெரிய மாற்றம் ஒன்று நிகழணம்" என உலகம் எதிர்பார்த்தது என்று எழுதுகிறார். அதாவது. இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் சோசலிச மாற்றங்கள் நிகழலாம் என உலகம் எதிர்பார்த்தது என்று ணிக் கருதியிருக்கிறார். ஆனால் அந்த நூற்றாண்டின் முடிவில் சோசலிசத்திற்கே சரிவு ஏற்பட்டிருக்கிறது. எரிக்கின் நான்காவது தொகுதியை வாசிப்பவர்க்கு துன்பியல் உணர்வு ஏற்படுகிறது என்பது உண்மையே.
நான்காவது தொகுதிக் காலத்தில் எரிக் ஹோப்ஸ்பாம் என்ற மாபெரும் வரலாற்றாசிரியர், மார்க்சிய ஆசிரியர் நேரடியாக வாழ்ந்தார். இப்பகுதியிலுள்ள தகவல்கள் பெருமளவில் அவரால் கைக்கெட்டிய தூரத்தில் அனுபவிக்கப்பட்டவை. தோல்விகளை அவர் கண்கூடாகக் கண்டார். அவர் நேரடியாக வருத்தினார். அவரது தனிப்பட்ட வாழ்வும் இந்த நூற்றாண்டின் வரலாறும் பல இடங்களிம் சந்தித்துக் கொள்கின்றனர்.
தீர்க்கமான பல கருத்துக்களை எவ்வித தயக்கமுமின்றி எரிக் ஹோப்ஸ்பாம் இப்பகுதியில் கூறிச் செல்லுகிறார். ரஷ்யர்கள் சோவியத் புரட்சியைக் கப்பற்றுவதற்கு பெரும் போராட்டங்கள் நிகழ்த்த வேண்டியிருந்தது என்பதை வெளிப்படையாகக் கூறுகிறார். "ஒரு கட்சி உறுப்பினருக்கு எது மிக மிக முக்கியமானது? என்று அவரைக் கேட்ட போது. "முழு அர்ப்பணிப்பு", "கட்சிக்கு முழு முன்னுரிமை வழங்குவது என்று பதில் சொல்லுகிறார்.
"நேரடியாக அனுபவப்பட்ட இக்காலத்தில் எது உங்களை அதிகம் தொட்டது? என்று கேட்டபோது. "ரஷ்யர்களின் தியாகங்கள்". "தேவைக்கு மிக அதிகமாகத் தியாகம் செய்துள்ளார்கள்" என்று பதில் சொல்லுகிறார். "ஸ்டாலின் இல்லாமல். செம்படை இல்லாமல், போரில் ரஷ்யாவைக் காப்பாற்றி இருக்க முடியாது. உங்களுக்கு அவர் பயங்கரவாதியாகத் தெரியலாம், ஆனால் எங்களை விடுவித்தவர் அவர்தான்.