'திரந்த மார்க்சியம்' தொகுதி நான்கு 'மூடிக் கொள்ளும் உலகுக்கு எதிராக' (Against a Closing World) என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுகவுரையுடன் சேர்ந்து 12 கட்டுரைகளைக் கொண்ட இப்பகுதியின் கடைசிக் கட்டுரை 'புரட்சியிலிருந்து சனநாயகம் வரை' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. போலி சமூக அமைப்பின் சரிவுகள், கம்யூனிஸ்டுகளை சனநாயகம் நோக்கி மடைமாற்றம் செய்துள்ளன என்ற கருத்து இத்தலைப்பில் தென்படுகிறது. குறிப்பிட்ட இக்காலத்தில் லக்லௌ சந்தால் மோஃபே, ஹார்ட் நேக்கி கிரேபர் போன்ற எழுத்தாளர்கள் சனநாயகத்தைத் தீவிரப்படுத்துவது என்ற திசையில் சிந்திக்க ஆரம்பித்தார்கள்.
மட்டுமின்றி, "வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்". "அரேபிய வசந்தம்". "கறுப்பின மக்களின் உயிர்கள்". "பொதுவெளிகளைக் கைப்பற்றுதல்" போன்ற இயக்கங்கள் சனநாயகத் திசை நோக்கி அமைந்தவை ஆகும். பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதையும் இத்துடன் சேர்ந்துக் கொள்ள வேண்டும்.
சனநாயகத்தைத் தீவிரப்படுத்தல் என்பது 'புதிய உடோப்பியா' என்று கணிக்கப்பட்டது. உலக அரசியல் தீவிரப்பட்டது என்பது உண்மைதான். 60, 70 களிலிருந்தே மாணவர்கள், இளைஞர்கள் பரந்த அளவில் இடதுசாரி அரசியலில் படுபட்டனர். கிரேபம், நோஅம் சோம்ஸ்கி போன்றோர் அமெரிக்கக் கண்டத்தில் அரசியல் இயக்கங்களுக்கு இடதுசாரிப் பண்புகளை ஏற்றினர்.
பெண் விடுதலை இயக்கங்கள், இயற்கை சூழலிய போராட்டங்கள், கனிம வளங்களுக்கான போராட்டங்கள். புலம் பெயர் தொழிலாளர் போராட்டங்கள், ஒடுக்கப்பட்ட சாதிகள், இனங்களின் எழுச்சிகள் எனவும் மக்கள் திரளின் போராட்டங்கள் சனநாயகத்தின் முகங்களைச் சிவப்பாக்கின.