முதலாலியத்தின் மருத்துவத் தாதியாக மூலதனம் அமைந்தது. இருப்பினும் ஆரம்ப மூலதனத் திரட்டுதல் என்பது ஒரு கடினமான பல வேளைகளில் ஒரு கோரமான நிகழ்வுப் போக்கு ஆகும்.
ஆரம்ப மூலதனத் திரட்சி குறித்த மார்க்சின் கருத்துக்களை ஒட்டி, எரிக் ஹோப்ஸ்பாம் இந்த இயலை அமைத்துள்ளார். ஐரோப்பியக் கடற் கொள்ளையர்கள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் முதல் சௌட்டர்கள் என்று மார்க்ஸ் எழுதுவார். அதேபோல ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க செல்வந்தர்களே பிரிட்டிஷ் அரசீன் வருகை தரும் விருந்தாளிகள். காலனிய நாடுகளில் திருடப்பட்ட இயற்கைச் செல்வங்களும் அந்நாடுகளில் வசூலிக்கப்பட்ட வரிப் பணமும் தான் ஆங்கிலேய நாட்டில் ஆரம்ப மூலதனமாக அமைந்தன என்பது குறித்தும் மார்க்ஸ் எழுதுவார்.
ஆங்கிலேய மூலதனம் காலனிய ஆட்சியாலும் பின்னர் அது ஏகாதிபத்தியமாக மாறியதாலும் உலக நாடுகளை அமோகமாகக் கொள்ளையடிந்தது. முதலாளியம் அதன் நடை உடை பாவனைகளால் ஒரு புது உலகமாக மாறியது. போதாத குறைக்கு அது தன்னைப் போலவே உலக நாடுகளை உருமாற்ற விழைந்தது. மிக விரைவில் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளும் முதலாளியப் பேரரசாக உருவாகியது. தனி உடமைப் போட்டிப் பொருளாதாரம் என்பதே முதலாளியத்தின் தாரக மந்திரம்.
மூலதனம் தொழிம், வணிகம் ஆகிய துறைகளைக் கடந்து உலக அரசியலிலும் ஈடுபட்டது. முதலாளியத்தின் உலக அரசியல் அதனை ஏகாதிபத்தியமாக மாற்றியது. பிரிட்டிஷ் காலனியாக இருந்து விடுதலை பெற்ற ஐக்கிய அமெரிக்கா பிற நாடுகளை அடிமைப்படுத்த மாட்டோம் என்று உறுதி அளித்தது. ஆயின் மிக விரைவில் உலவின் ஏகாதிபத்திய அரசியலில் அது முன்கை எடுத்தது. இரண்டு உலகம் போர்களிலும் அது ஒளிவு மறைவாகப் பங்கேற்றது. உலகப் போருக்குப் பிறகு உலகின் மிக ஆற்றல் கொண்ட புதுக் காலனிய ஆதிக்கமாக அதுவே உருவெடுத்தது. ஆயுத தொழில் நுட்பம் நவீன விஞ்ஞானம் மற்றும் மூலதனத்தின் ஒரு முக்கியக் கருவியாகிய குழல்களையும் எரிக் ஹோப்ஸ்பாம் கவனத்துடன் எடுத்துக் காட்டுகிறார்.