வர்க்கமும் இனமும் பொய்யான எதிர்வுகள். இருப்பினும் வரலாற்றாசிரியர்கள் அவை இரண்டையும் மிகவும் வேறுபட்டவையாகச் சித்தரிக்கின்றனர் என்று சொல்லப்படுவதுண்டு.
இனம் என்பது ஓர் உணர்ச்சிவசப்பட்ட வகைமை, வர்க்கம் என்பது ஐரோப்பிய அறிவொளி மரபில் விளைந்தது என்று கூறப்படுவதுண்டு.
தொழில் வளர்ச்சி பெற்ற சமூகத்தில் வரிக்க உருவாக்கம் முந்திக் கொள்ளும், ஆயினும் தொழில் வளர்ச்சியின் போதாமை இனங்களின் செல்வாக்கைத் தக்க வைத்துக் காப்பாற்றும்.
வர்க்கம் முதன்மையானது: இருப்பினும் இனம் இரண்டாம் பட்சமானது அல்ல. ஒரு நாட்டின் அகநிலையில் இனம் வலுவாகத் தொழில்படும்: புறநிலையில் வர்க்கம் வினையாற்றும்.
மேலை நாடுகளுக்கிடையில் மிகப்பெனும் சுதந்திர சக்தியாகத் தன்னைக் காட்டிக் கொண்ட அமெரிக்க ஐக்கிய நாடுகளால் இன்றுவரை அந்நாட்டின் கறுப்பின மக்களை விடுதலை செய்ய இயலவில்லை.
வர்க்கம், இனம், மார்க்சியம்' என்ற இந்த நூல் மிக விரிவாக வர்க்கம், இனம் என்ற மக்கள் பிரிவிைைறப் பற்றி, அவர்களின் சமூக இயங்கியல் பற்றிப் பேசக்கூடிய நூல்.