சூரியனுக்குக் கீழிருக்கும் எல்லா ஜீவராசிகளும் குதூகலத்தையும், கொந்தளிப்பையும் அனுபவித்துக் கொண்டுதானிருக்கின்றன… மொழியும், சாதியும், மதமும், இனமும் தாண்டி மனிதம் தனது எல்லைகளை விரித்துக்கொண்டேதான் சென்று கொண்டிருக்கிறது… இதற்குள் சிக்கிக்கொண்ட சில மனிதர்கள் அந்தச் சூழ்நிலைகளில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று பார்க்கின்றன இக்கதைகள்… அவர்களது செயல்பாடுகளைக் குறித்துத் தீர்ப்புச் சொல்வது உங்களுக்குக் கடினமாகத்தான் இருக்கும்.. எந்தத் தீர்ப்பு இருசாராரும் மனதார ஏற்றுக்கொள்ளும்படி இருந்திருக்கிறது..?