உலகத்தில் மிகச்சிறந்த நீதி நூல், அர்த்த சாஸ்திரநூல், கதை நூல், படிக்க சுவாரசியமான நூல் என்று எப்படிப் பார்த்தாலும் மகாபாரதம் முதலிடம் பெறுகிறது. மகாபாரதத்திலுள்ள சில கதைகள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. பாண்டவர்கள் வனத்தில் பிறந்தார்கள். பிறந்த இடத்துக்கு இவர்கள் பாசமோ என்னமோ தெரியவில்லை, இவர்கள் தங்களுடைய பெருமளவு காலத்தை வனத்திலேயே கழிக்க வேண்டிய நிர்ப் பந்தத்துக்கு ஆளானார்கள்.