நம்ம மனசு நம்மக்கிட்டேயே இருக்கமாட்டேன்குதே! உலகம் சுற்றும் வாலிபன் போல அதுவும் சுற்றக் கிளம்பிடுதே! புறத் தோற்ற மயக்கத்தில் லியித்துவிடுகிறது. காட்டாற்று வெள்ளமாய் அணை மீறும் ஆசைகள் தான், மனசைக் கட்டி எங்காவது அழைத்துப்போய், மாயாஜால வேடிக்கைகள் காட்டி மயக்குகின்றன.