ஸ்கோன்னதமான பதினான்கு உலகத்தில் சிறந்ததும் சூரிய, சந்திரன், நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாம் சஞ்சரிப்பதும் பொன்னுலக மத்தியில் பூத்திருப்பதும் கண்ணன் கழலால் அறந்ததும் பழம் பெரும் பூமியில் உள்ளதும் ஆகிய இப்பாரத திருநாட்டில் தென்னாட்டில் ஸ்ரீ பரமேஸ்வருடைய அருளாசியினால் சித்தர்கள் முப்பது முக்கோடி தேவர்கள் 48 ஆயிரம் ரிஷிகள், மாகன்கள், முனிவர்கள், ஸ்வாமிகள், யோகிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், கவிஞர்கள், புலவர்கள், பக்த கோடிகள், அடியார்கள், அறிஞர்கள் யாவரும் தோன்றி அருள் பாலித்து வரும் நேரத்தில் சர்வமங்களம் வழங்கும் சுப நட்சத்திரங்கள், சுப யோகங்கள், சுப கரணங்கள் சிறந்து விளங்கவும் அருட் பாலிக்கவும், கோத்திரம், வருடம், மாதம், பட்சம், வாரம், நாள், பெயர், நட்சத்திரம் ஆகியவற்றை தகுந்தாற்போல் தெளிவாகக் கூறி பூஷ்பம் குங்குமத்தில் கை தொட்டு பிரார்த்திக்க வேண்டுகிறோம்.