துக்ளக் சத்யா அவரின் இயற்பெயர்
டி.எல்.சத்யநாராயணன். சோ அவர்களால் அவரின் பெயர் சுருக்கி 'சத்யா' என
ஆயிற்று. பல பத்திரிகைகளில் கதை, கட்டுரைகள் எழுதி இருக்கிறார், சத்யா.
தமிழக அரசின் வனத்துறை பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற உடன், ஆண்டு 1996
முதல், 'துக்ளக்' வார இதழில், உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 1,500
அரசியல் கட்டுரைகள், 300 நகைச்சுவை கட்டுரைகள், 'டிவி' தொடர்கள், நான்கு
மேடை நாடகங்கள், 24 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.