யாருடைய வாழ்க்கையும் மற்றவர்க்குச் சொல்லத்தக்க மறுபடியும் நினைவு கூரத்தக்க சம்பங்கள் நிறைந்தாகவே இருக்கும். அவை கேட்பதற்கும் ரசமாகவே இருக்கும். ஆக, யாரும் ஒரு சில நல்ல கதைகளாவுது எழுதிவிடுவது சாத்தியம் என்று க.நா.சு. சொல்வார். எங்கோ எழுதியுமிருக்கிறார். தமிழ் ஆசிரியாராக, அவருக்குச் சொல்ல ரசமான விஷயங்கள் நிறையவே இருந்திருக்கின்றன. தென் பாண்டியச் சீமைக்காரர்களே பிறவி கதைக்காரர்கள் போலும், அத்தோடு கிண்டலுக்கும் கேலிக்கும் வரம் வாங்கி வந்தவர்கள் போலும், சாதாரணமாகப் பேசினாலே, அதில் ஒரு தமாஷ் ஒளிந்திருந்து நகைக்கும். கிண்டல் என்று செய்யக் கிளம்பினால் கேட்கவா வேண்டும்.