மருந்தில்லா மாற்று சிகிச்சை முறைகளைப் பற்றி அறிந்து கொள்வதிலும் அதனைப்
பயிற்சி செய்யும் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவதிலும் மக்கள் அதிக
ஆர்வமும், அக்கறையும் காட்டுவதை தற்பொழுது நாம் பார்க்கிறோம். இன்னும் சமூக
வலைதளங்களில் இயற்கை சிகிச்சை முறைகள், மருந்தில்லா சிகிச்சை, பாரம்பரிய
மற்றும் இயற்கை உணவை உட்கொள்வதின் பயன்கள் பற்றியும் அதிக அளவில்
பகிரப்படுகிறது. இப்படிப் பகிரப்படுபவற்றையும், கேள்விப்படுபவற்றையும்
அப்படியே எடுத்துக் கொண்டு பின்பற்றுவது சரியா என்று தெரியவில்லை.