சங்க இலக்கிய மொழி வெளிப்படுத்தும் இலக்கியத் தன்மைகளைப் பற்றியும் அந்த இலக்கியம் சார்ந்த பண்பாட்டின் வாழ்வு முறைகள், நம்பிக்கைகள், அரசியல் அமைப்புகள் பற்றியும் பேசும் ஜார்ஜ் ஹார்ட்டின் இந்த நூல் தமிழ் இலக்கிய ஆய்வில் முக்கியமான நூல்.
அரை நூற்றாண்டுக்குப் பிறகு தமிழாக்கம் பெறும் இந்த நூல் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குத் தமிழ் இலக்கிய ஆய்வு செல்வதற்கான பாதையைப் பழைய தரவுகளை மீள்பார்வை செய்தும் புதிய தரவுகளைச் சீர்தூக்கியும் துவக்கி வைக்கிறது எனலாம். - இ.அண்ணாமலை சிகாகோ பல்கலைக்கழகம் (ஓய்வு)