பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி இருக்கும், 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' என்ற பாடல் இங்கே இடம் பெறுகிறது.
இந்தப் பாடலைக் கவியரசர் அமைத்திருக்கும் முறையே நம்மை வியக்க வைக்கிறது. இந்தப் பாடலில் நான்கு 'பாரா'க்கள் உள்ளன. அவைகளில் முதல் இரண்டு ஒரு மாதிரியாகவும், அடுத்த இரண்டு வேறு மாதிரியாகவும் அமைந்துள்ளன. அந்தப் போக்கிலேயே இப்போது நாம் விளக்கம் காணலாம்.