அடாவடி அம்மாக்கண்ணு தன்னம்பிக்கையும் மன உறுதியும் கொண்ட ஒழுக்கமுள்ள பெண். உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணப்பாங்கு உடையவள். ஒழுக்கமற்ற மாமனின் மிருக வெறிக்கு இளவயதில் பலியாகும் அவளுடைய வாழ்க்கை பெரும் சோதனைக்கு உள்ளாகிறது. வறுமையுடன் போராடி, அன்பின் அடையாளமான அண்ணனுக்காக வாழ்ந்து, உயிர்த்தோழிக்கு உற்ற துணையாக இருந்து, உள்ளம் கவர்ந்தவனை கரம் பற்றி சமூகத்திற்கு அடையாளம் காட்டி தண்டனைப் பெற்றுத் தந்த அசாராரணப் பெண். பாரதி கனவு கண்ட ஓர் உதாரண மங்கையாகத் திகழும் அம்மாக்கண்ணுவைப் படைத்தவனுக்குப் பெருமை இருக்கத்தானே செய்யும்.