உலகப் பிரசித்தி பெற்ற டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா ஆகியோர் பெயர்களைப் பள்ளிப் பருவத்திலேயே அறிந்துகொள்கிறோம். ஆனால், அவர்களுடைய படைப்புகளை, வரலாறுகளைப் படித்து மகிழும் வாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை.
அந்த வகையில் பெர்னாட்ஷா வாழ்க்கை வரலாற்றை இந்நூலில் எழுதியிருக்கிறார் ஆசிரியர் முல்லை முத்தையா அவர்கள்..
பின்அட்டை குறிப்பு:
கட்சிப் பத்திரிகை
'ஒரு கட்சிப் பத்திரையை மட்டும் படிப்பவன் உண்மை எதையும் உணர முடியாது. தன் கட்சிப் பத்திரையைக்காசு கொடுத்து வாங்கும்போதே மற்றக்கட்சிப் பத்திரிக ஒன்றையும் வாங்கிப் படிப்பதே கடமை. அப்போதுதான் கண்மூடிப் பின்பற்றும் அறியாமை நீங்கும்'
எழுத்தாளன் யார்?
"எவன் தன்னைப் பற்றியும், தான் வாழும் காலத்தையுப் பற்றியும் எழுதுகின்றானோ அவனே எல்லா மக்களைப் பற்றியும் எல்லாக் காலத்தைப் பற்றியும் எழுதும் எழுத்தாளன் ஆவான்.